11 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி ஊழிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் கிரானிக் டெக்ஸ்ட்(44). இவர் மான்ஸ்ஃபீல்டில் உள்ள ஸ்மித் உயர்நிலைப் பள்ளியில் நிர்வாக உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இவர் சமூக வலைதளம் மூலம் பழகிய 11 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக தற்போது கைதாகியுள்ளார். 2022-ல் சிறுவனை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதனையடுத்து சிறுவனின் நடவடிக்கைகளால் சந்தேகமடைந்த பெற்றோர் சிறுவனிடம் நடத்திய விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
