ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் இந்தியாவில் கடந்த சில நாட்களாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, குறிப்பாக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்கள் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த இக்கட்டான சூழலில், குஜராத் துறைமுகத்திற்கு 42,000 மெட்ரிக் டன் LPG ஏற்றிக்கொண்டு ‘ஜக் வசந்த்’ என்ற டேங்கர் கப்பல் வந்து சேர்ந்துள்ளது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
இந்தக் கப்பலின் வருகையினால் தட்டுப்பாடு நிலவிய சந்தைக்குத் தேவையான எரிவாயு இருப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் நிலவி வந்த சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு விரைவில் கட்டுக்குள் வரும் என்றும், விநியோகம் சீராகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
