“டிப்ளமோ / B.Sc படுச்சுருந்தா போதும்…” இந்தியன் ரயில்வே தரும் மெகா ஆஃபர் … மாசம் சம்பளம் எவ்வளவு தெரியுமா?.. மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு…!

By Visaka on ஆடி 23, 2026

Spread the love

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் என்ஜினியர், டெப்போ கண்காணிப்பாளர் மற்றும் வெல்டர் ஆகிய 4,098 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு ஏற்ப தொடர்புடைய துறையில் டிப்ளமோ அல்லது B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

18 முதல் 35 வயதுக்குள் உள்ளவர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய கட்டங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஆரம்ப மாதச் சம்பளமாக ரூ 35,400 வழங்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ரூ 500 விண்ணப்பக் கட்டணம் செலுத்தி, செப்டம்பர் 13-க்குள் rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள வழியில் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.