திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சரவணன் என்பவர் ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். இவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமியை, அருகில் இருந்த சுடுகாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அந்தச் சிறுமிக்கு சரவணன் ஏற்கனவே பழக்கமானவர் என்பதோடு, அவரை மாமா என்று உரிமையோடு அழைத்து வந்துள்ளார். தான் மிகவும் நம்பிய நபர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதால் அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி, செய்வதறியாது சுடுகாட்டில் இருந்து அழுதபடியே தப்பி ஓடி வந்துள்ளார்.
நடந்த சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தனர். இச்சம்பவம் குறித்து குழந்தைகள் நல வாரிய அதிகாரிகளும் நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இவ்விசாரணையில், சிறுமி சரவணனை மாமா என்று அழைத்ததைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசார் சரவணன் மீது போக்சா சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் சாலையோர உணவகம் ஒன்றில் கூடுதல் சோலே கேட்ட ஓட்டுநர் ஒருவர் கொடூரமாகக் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும்…
போபாலில் உள்ள பிரபல சௌக் பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு அழகுசாதனப் பொருட்கள் அங்காடியில் அதிர்ச்சியளிக்கும் திருட்டு…
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…