மும்பையில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் நைகாவும் பகுதியில் நவகர் நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் 12 வது மாடியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நான்கு வயதில் அன்விகா என்ற ஒரு குழந்தை உள்ளது. கடந்த 22 ஆம் தேதி இரவு 8 மணிக்கு அந்த குழந்தையும் அந்த குழந்தையின் தாயும் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டனர். வீட்டை பூட்டிய தாய் குழந்தையை அருகில் உள்ள காலணிகள் வைக்கும் சிறிய மர அலமாரி மீது அமர வைத்துள்ளார். பிறகு குழந்தையின் செருப்பை எடுக்க முயன்றார். அப்போது அருகில் இருந்த ஜன்னல் மீது குழந்தை ஏற முயன்றது.
இதில் நிலை தடுமாறி 12வது மாடியில் இருந்து தரைத்தளத்தில் தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. வீட்டு வாசலை ஒட்டி இருந்த ஜன்னலில் உரிய பாதுகாப்பு வசதி ஏற்படுத்தாமல் இருந்ததே குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
