சொந்த ஊர் போறீங்களா…? பொங்கலுக்கு இயக்கப்படும் 4 ஸ்பெஷல் ரயில்கள்…! தெற்கு ரயில்வே கொடுத்த ஹேப்பி நியூஸ்…!!

By Devi Ramu on தை 9, 2026

Spread the love

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக, தெற்கு ரயில்வே கூடுதலாக நான்கு சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. மைசூரு – தூத்துக்குடி இடையே இன்றும், வரும் 13-ம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதேபோல், பெங்களூருவில் இருந்து கொல்லம் மற்றும் கண்ணூர் ஆகிய நகரங்களுக்கும் குறிப்பிட்ட தேதிகளில் சிறப்புச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

பண்டிகை கால நெரிசலைக் குறைக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை முதலே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெங்களூரு கண்டோன்மென்ட் நிலையத்திலிருந்து கண்ணூருக்கு இன்றும், வரும் 13-ம் தேதியும் மாலை நேரங்களில் ரயில்கள் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

மறுமார்க்கத்தில் தூத்துக்குடி, கொல்லம் மற்றும் கண்ணூர் ஆகிய இடங்களில் இருந்தும் பெங்களூரு மற்றும் மைசூரு நோக்கித் திரும்பும் பயணிகளுக்காகச் சிறப்பு ரயில்கள் தயார் நிலையில் உள்ளன. நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்பவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களது பயணத்தைச் சிரமமின்றி அமைத்துக்கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.