1 இல்ல 2 இல்ல…! மொத்தம் 10.89 கோடி…! பக்காவாக பிளான் போட்ட 4 பேர்…. சிக்கலில் கடை ஓனர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

By Devi Ramu on புரட்டாதி 17, 2025

Spread the love

சென்னை மாவட்டம் மாநகரத்தில் சதீஷ்குமார் ரெட்டி- ஸ்ரீதேவி தம்பதியினருக்கு சொந்தமான நகைக்கடை அமைந்துள்ளது. இந்த நிலையில் சென்னை அண்ணாநகரை சேர்ந்த சுனிதா பிரகாஷ், அவரது கணவர் பிரகாஷ், அனிதா ஸ்ரீதர், சஞ்சய் ஆகியோர் சதீஷுக்கு அறிமுகம் ஆகியுள்ளனர். அவர்கள் 1.31 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள், 5.13 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை கடனாக வாங்கியுள்ளனர்.

பின்னர் இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி 4.45 கோடி பணத்தையும் வாங்கி மொத்தமாக 10. 89 கோடி ரூபாயை ஏமாற்றியுள்ளனர். பின்னர் நீண்ட நாட்களாகியும் அந்த நபர்கள் பணத்தை கொடுக்கவில்லை. மேலும் போலியான வரைவோலையை காண்பித்து ஸ்ரீதேவியை ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து சதீஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

   

அதாவது பிரகாஷ், அவரது மனைவி சுனிதா, அனிதா ஸ்ரீதர், சஞ்சய் ஆகியோர் ஸ்ரீதேவியை ஏமாற்றி நகைகளை வாங்கியுள்ளனர். பின்னர் அதற்கான பணத்தை கொடுக்காமல் வழக்கறிஞரான சிவகுருநாதன் என்பவரை வைத்து மிரட்டியுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பிரகாஷ் சுனிதா, சிவகுருநாதன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.