4 MLA-க்கள் ராஜினாமா.. தவெகவின் திடீர் ட்விஸ்ட்…. அரசியல் வட்டாரத்தை அதிரவைக்கும் பிரேக்கிங் தகவல்….!

By Nanthini on ஆனி 9, 2026

Spread the love

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தவெககட்சியில், சமீபத்தில் தங்கள் MLA பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு இணைந்த 4 முக்கிய நிர்வாகிகளில் ஒருவருக்கு மட்டுமே வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க தவெக தலைமை முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. அந்த அதிர்ஷ்டசாலி நபர் இசக்கி சுப்பையா தான் என்றும், தொகுதி நிலவரம் மற்றும் அவரது அரசியல் செல்வாக்கைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதே வேளையில், சீட் கிடைக்காத மற்ற மூன்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களையும் சோர்வடைய விடாமல் திருப்திப்படுத்தும் நோக்கில், அடுத்த சில மாதங்களுக்குள் அவர்களுக்குக் கட்சியின் முக்கிய வாரியப் பதவிகளை வழங்கத் தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. தற்போதைக்கு இவை அனைத்தும் அரசியல் வட்டாரத்தின் உள்விவகாரத் தகவல்களாக மட்டுமே உலா வரும் நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தவெக தரப்பிலிருந்து இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.