முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) அமைச்சரவையில், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 4 பெண் முகங்களுக்கு அமைச்சர்களாகப் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே த.வெ.க அரசின் மிக முக்கியத் துறையான தொழில்துறையின் அமைச்சராகக் கீர்த்தனா பொறுப்பேற்றுச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில், பெண்களின் அதிகாரப் பகிர்வை மேலும் உறுதி செய்யும் வகையில் இந்த எண்ணிக்கை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இன்று வெளியிடப்பட்டுள்ள புதிய அமைச்சரவை விரிவாக்கப் பட்டியலிலும் பெண் சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன்படி அவிநாசி தொகுதி எம்.எல்.ஏ கமலி, குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ விஜயலட்சுமி மற்றும் ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ ஜெகதீஷ்வரி ஆகிய மூவரும் புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்க உள்ளனர். இந்த அதிரடி மாற்றத்தின் மூலம் விஜய் அமைச்சரவையில் பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
