ஒரே குடும்பத்திலிருந்து உருவெடுத்த 4 தலைமுறை நடிகைகள்.. தமிழ் சினிமாவையே தன்வசம் வைத்திருந்த குடும்பம்..

By Archana on தை 4, 2024

Spread the love

நெப்போட்டிசம் என்ற வார்த்தை இன்றைய சினிமாவில் அறியப்பட்ட ஒன்று. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அடுத்தடுத்த பெரிய பட்ஜெட் படங்களில் நடிப்பர். அவர்களுக்கு நடிக்கத் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும். பாலிவுட்டில் இந்த குரூப்பிசம் என்பது அதிகம். காலப்போக்கில் தெலுங்கு, மலையாளம், தமிழ் என எங்கும் பரவத் தொடங்கி இருக்கிறது இந்த குரூப்பிசம். குறிப்பாக இந்த நெப்போட்டிசத்தில் ஆண்கள் மட்டுமே காலூன்றி வரும் நிலையில், அந்தக் காலத்திலேயே தமிழ் சினிமாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கொள்ளுப் பாட்டி முதல் பேத்தி வரை பெண்கள் மட்டுமே நிறைந்த சினிமா குடும்பம் பற்றி பார்க்கலாம்.

#image_title

தமிழ் சினிமாவில் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நடிகைகள், கதாநாயகிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட வாரிசு நடிகை தான் லட்சுமி. வரது அம்மா ருக்மணி. தமிழ் சினிமாவில் இரண்டு ருக்மணிகள் இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவர் ஆர்கே ருக்குமணி மற்றொருவர் குமாரி ருக்மணி. ஆர்.கே ருக்மணி 30 மற்றும் 40 களில் தமிழ் 30 மற்றும் நாடனங்களில் சிறந்து விளங்கினார்.

   
   

அதே போல பாரிஸ் பியூட்டி என அழைக்கப்பட்டவர் தான் குமாரி ருக்மணி. இவர் தமிழ் சினிமாவில் 30களில் இருந்து 70களின் இறுதி வரையில் சிறந்த நடிகையாக இந்தார் குமாரி ருக்மணி. இவரது தாய் ஜானகியும் ஒரு நடிகை தான். தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்ட இவர்களின் குடும்பம், ருக்மணி சிறு வயதாக இருந்தப் போதே சென்னைக்கு குடியேறி வந்துள்ளனர். மும்பையில் ஹரிச்சந்திரா என்ற படத்தின் படப்பிடிப்பின் போது, சிறு வயது லோகிதாசனாக நடிக்க சரியான குழந்தை நட்சத்திரம் கிடைக்கவில்லை. அப்போது எதார்த்தமாக கதாநாயகியின் அறையில் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்த ருக்மணி படக்குழுவின் கண்களில் பட, அவரது தாய் ஜானகியின் அனுமதியோடு ஹரிசந்திரா படத்தில் குழந்தை லோகிதாசனாக அறிமுகமானார் ருக்மணி.

 

#image_title

குழந்தை நட்சத்திரமாக தொடர்ந்தவர், ஸ்ரீவள்ளி என்ற திரைப்படத்தின் மூலம் முறையாக கதாநாயகியாக அறிமுகமானார் ருக்மணி. 1946-ம் ஆண்டு இயக்குநர் ஒய்.வி.ராவ் தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடித்த படத்தில் ருக்மணியும் நடிக்க, இருவருக்கும் இடையே காதல் மலர, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் லட்சுமி. தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பதற்கிணங்க, தாயைக் காட்டிலும் சினிமாவில் கொடி கட்டி பறந்தார் லட்சுமி. எம்.ஜி.ஆர்., சிவாஜி, சிவகுமார், ஜெய்சங்கர் என அப்போதைய முன்னணி நடிகர்களின் பல படங்களிலும் நடித்து, சினிமாவில் ஒரு வலம் வந்தார்.

#image_title

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி என பல மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். மேலும் நடிகை லட்சுமிக்கு சிறந்த நடிகைக்கான விருதுகளை தமிழ் நாட்டில்மட்டுமில்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பெங்காலி என் பல மாநிலங்களை சேர்ந்த விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 1969-ம் ஆண்டு பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் லட்சுமி. இந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா. லட்சுமியை தொடர்ந்து ஐஸ்வர்யாவும் சினிமாவில் கால் பதிக்கத் தொடங்கினார்.

#image_title

தெலுங்கு சினிமாவின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்த ஐஸ்வர்யா, தமிழில் நியாயங்கள் ஜெயிக்கும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்தடுத்து படங்கள் நடித்து வந்தாலும் ரஜினியின் எஜமான் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அன்று தொடங்கி இடையில் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி, சினிமாவில் இருந்து சிறிய ப்ரேக் எடுத்துக் கொண்டவர், பிறகு தமிழ், தெலுங்கு மொழிகளில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும், சீரியல்கள், படங்களில் சிறு சிறு வேடங்களிலும் நடித்தார். பின்பு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் வீட்டில் தயாரிக்கும் சோப்புகளை வீடு விடாக சென்று விற்கத் தொடங்கியவர், ஒரு நேர்காணல் மூலம் மீண்டும் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

#image_title