தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் மதுப்பிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை ஆகிய முக்கிய நிகழ்வுகளையொட்டி தமிழகம் முழுவதும் மொத்தம் நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஏப்ரல் 21, 22 மற்றும் வாக்குப்பதிவு நடைபெறும் தினமான ஏப்ரல் 23 ஆகிய மூன்று நாட்களும், அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ம் தேதியும் அனைத்து மது விற்பனை நிலையங்களும் கட்டாயம் மூடப்பட்டிருக்க வேண்டும். இந்த உத்தரவை மீறி ரகசியமாக மது விற்பனை செய்தாலோ அல்லது விதிகளை மீறினாலோ சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
