லாட்டரியில் ரூ.4 கோடி பரிசு…! மனைவிக்கு தெரியாமல் மறைந்த நபர்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்…!!

Spread the love

ஜப்பானைச் சேர்ந்த 66 வயது முதியவர் ஒருவர், தான் லாட்டரியில் வென்ற ரூ. 3.8 கோடி (600 மில்லியன் யென்) தொகையைத் தனது சிக்கனமான மனைவிக்குத் தெரியாமல் மறைக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. மாத ஓய்வூதியமாக 2,000 டாலர் மட்டுமே பெற்ற இவருக்கு, இந்த எதிர்பாராத பெரிய தொகை கிடைத்தவுடன், மனைவிக்குத் தெரியாமல் ஆடம்பரமாகச் செலவு செய்து உல்லாசமாக இருக்கலாம் என்று நினைத்துள்ளார்.

அதனால், லாட்டரியில் தனக்கு வெறும் 32,000 டாலர் மட்டுமே விழுந்ததாகவும், அதை வைத்து வீட்டைச் சீரமைக்கப் போவதாகவும் மனைவியிடம் பொய் கூறியுள்ளார். ஆனால், வீட்டிற்குத் தெரியாமல் இவ்வாறு பணத்தைச் செலவு செய்வதால் அவருக்குத் குற்ற உணர்ச்சி அதிகரித்துள்ளது. தனது தந்தை கடைசி காலத்தில் விவாகரத்து பெற்று, பணரீதியாகவும் தனிமையிலும் கஷ்டப்பட்ட நிகழ்வு அவருக்கு நினைவுக்கு வந்துள்ளது.

இதையடுத்து மனம் திருந்திய அந்த முதியவர், உடனடியாகத் தனது நிதி ஆலோசகரை அழைத்து ஆலோசித்துள்ளார். அதன் பிறகு, தான் லாட்டரியில் வென்ற முழுப் பணத்தையும் தனது பெயரில் காப்பீடு (Insurance) செய்து, அதற்குப் பயனாளிகளாகத் தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் பெயர்களைச் சேர்த்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, “இந்த பணம் எனது சொந்த உழைப்பால் கிடைத்திருந்தால் பெருமைப்பட்டு இருப்பேன். ஆனால் எந்த முயற்சியும் இன்றி இது கிடைத்ததால், எனக்கு மகிழ்ச்சியான நினைவுகளைத் தரவில்லை” என்று கூறியுள்ளார். இந்தச் சம்பவம், குடும்ப உறவுகள்தான் செல்வத்தைவிட முக்கியம் என்பதை உணர்த்துகிறது என்று நெட்டிசனன்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Devi Ramu

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

7 மணத்தியாலங்கள் ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

7 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

7 மணத்தியாலங்கள் ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

8 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

8 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

8 மணத்தியாலங்கள் ago