மரண ஓலமிடும் நேபாளம்….. 389 உடல்கள் மீட்பு… 1000 பேர் மாயமா?….. கதறும் தமிழர்கள்… அதிகாலையிலேயே ஷாக் நியூஸ்….!

By Nanthini on ஆவணி 28, 2026

Spread the love

நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவு மற்றும் பனிப்பாறை உடைப்பு காரணமாக, லெண்டே கோலா மற்றும் போடேகோஷி ஆறுகளில் பேரழிவு தரக்கூடிய பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியின் சாலைகள், பாலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு பெரும் சேதம் அடைந்துள்ளன. இப் பேரிடரில் சிக்கி இதுவரை 389 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 977 பேர் காணாமல் போயுள்ளதாகவும் நேபாள பேரிடர் மேலாண்மை அமைப்பு அறிவித்துள்ளது. காணாமல் போனவர்களில் சுற்றுலா பயணிகள், பாதுகாப்பு படையினர் மற்றும் 500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரும் அடங்குவர். ராணுவம், காவலர்களுடன் இணைந்து ஹெலிகாப்டர்கள் மூலம் 13,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வெள்ளப்பெருக்கில் இந்தியர்கள் மற்றும் 21 தமிழர்கள் உட்பட நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகம் மூலம் மீட்ப நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளை நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நேரில் பார்வையிட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு அரசு முழு பொறுப்பேற்கும் என உறுதியளித்துள்ளார். மேலும், வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசின் அயலக தமிழர் நலத்துறை 24 மணி நேர அவசர உதவி எண்களையும் (1800 309 3793 / WhatsApp: 9289516712) அறிவித்து, நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறது.