ஆந்திர மாநிலத்தில் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த 19 வயது மாணவர் ஒருவர் தனியார் கல்லூரியில் பி டெக் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். அதே கல்லூரியில் 38 வயது பெண் ஒருவர் லேப் டெக்னீசியன் ஆக பணியாற்றி வருகின்றார். இவர் தன்னுடைய கணவரை பிரிந்து தனியாக வசித்து வரும் நிலையில் கணவர் இல்லாமல் தனிமையில் இருந்து வந்ததால் இவரை தனிமை வாட்டி வதைத்துள்ளது.
அப்போது கல்லூரியில் படிக்கும் மாணவருடன் இந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில் அது நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இதனை தொடர்ந்து கடந்த மே மாதம் அந்த மாணவன் தன்னுடைய பெற்றோரிடம் படிப்பு சம்பந்தமாக பெங்களூரு செல்வதாக கூறிவிட்டு அந்தப் பெண் ஊழியருடன் சென்றுவிட்டார். பிறகு மாணவர் வீடு திரும்பாத நிலையில் சந்தேகம் அடைந்த பெற்றோர் விசாரித்த போது பெண் ஊழியர் மாணவனை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் கடந்த ஜூலை 15ஆம் தேதி போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இப்படியான நிலையில் பெங்களூரில் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த இரண்டு மாதங்களாக மாணவருடன் பெண் ஊழியர் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் மீட்ட போலீசார் சில அறிவுரைகளை கூறி இருவரையும் தனித்தனியாக அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். 38 வயது பெண் 19 வயது வாலிபரை மயக்கி அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
