கூட்டணி பலமின்றி தனித்துக் களமிறங்கிய இடைத்தேர்தலில் சுமார் 32 சதவீத வாக்குகளைப் பெற்று திமுக தனது வலுவான வாக்கு வங்கியைத் திறம்பட தக்கவைத்துள்ளது. இந்தச் சாதனைக்குப் பின்னால் உதயநிதியின் உறுதியான வியூகம் இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதா வேண்டாமா என்று கட்சியின் சீனியர் தலைவர்கள் தயங்கி நின்றபோது, துணிச்சலுடன் களமிறங்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக நின்று கட்சியினருக்கு உற்சாகம் ஊட்டியுள்ளார்.
இந்தத் தேர்தல் முடிவுகள் அரசியல் அரங்கில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. கூட்டணி பலம் இல்லாமலேயே திமுக இவ்வளவு பெரிய வாக்கு வங்கியைத் தக்க வைத்திருப்பது, இனிவரும் தேர்தல்களில் தவெகவுக்கு சவாலாக அமையும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
