குரு பகவானின் வக்ர பெயர்ச்சி….! பணம் கொட்டும்..! கோடீஸ்வரர் ஆகும் விபரீத ராஜயோகம்… லிஸ்டில் உங்க ராசி இருக்கான்னு செக் பண்ணி பாருங்க…!!

By Devi Ramu on ஐப்பசி 12, 2026

Spread the love

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கல்வி, அறிவு, திருமணம் மற்றும் செல்வத்திற்குக் காரணமான குரு பகவான் வரும் டிசம்பர் மாதம் சிம்ம ராசிக்குள் வக்ர பெயர்ச்சி அடைய உள்ளார். இந்த வக்ர சஞ்சாரத்தின் மூலமாக சில குறிப்பிட்ட ராசிக்காரர்களின் கைநழுவிப் போன பழைய வாய்ப்புகள் மீண்டும் துளிர்விடும் என்றும், தொழில் மற்றும் நிதி நிலையில் சிறப்பான மாற்றங்கள் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மேஷம் ராசிக்காரர்களுக்குத் தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் கடந்த காலத் திட்டங்களை மறு ஆய்வு செய்யவும், தேங்கிக் கிடந்த பணிகளில் லாபம் பார்க்கவும் இது உகந்த காலமாகும். கடகம் ராசிக்காரர்களுக்குப் பணப்புழக்கம் அதிகரிப்பதுடன், பழைய முதலீடுகள் மூலம் கணிசமான லாபமும் நீண்ட நாட்களாக வராத பணமும் திரும்பி வரும். சிம்மம் ராசிக்காரர்களுக்கு அவர்கள் கடந்த காலத்தில் போட்ட உழைப்புக்கான பலன்கள் தேடிவருவதுடன், பதவி உயர்வு மற்றும் புதிய பொறுப்புகள் வீட்டின் கதவைத் தட்டும் என ஜோதிடத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆன்மீக மற்றும் ராசி பலன் செய்தி சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.