தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஏழை எளிய மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை அனைவருக்கும் அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்களுக்காக இலவச பேருந்து திட்டம் மற்றும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விடுபட்ட குடும்பத் தலைவிகள் மகளிர் உரிமைத் தொகைக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக விண்ணப்பித்துடன் நிலையில் அவர்களுக்கும் விரைவில் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
இதனிடையே மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் செப்டம்பர் 15ஆம் தேதி இன்று டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு செப்டம்பர் 16 நாளை 3000 கோடி கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கான கடன் உதவி திட்டத்தை சேலம் கருப்பூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார். இதன் மூலம் தமிழகம் முழுவதும் 2.55 கோடி பெண்கள் பயன் பெறுவர்.
