தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலை இருந்த நிலையில் தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. திமுக, அதிமுகவை போன்று தமிழக வெற்றிக் கழகமும் மாற்றுக்கட்சியினரை இணைக்கும் புதிய ஃபார்முலாவை கையில் எடுத்துள்ளது.
இந்நிலையில் விழுப்புரத்தில் தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் 300-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் தவெக கட்சியில் இணைந்துள்ளனர். தொண்டர்களிடம் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என விஜய் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
