கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் உடையாக்குடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஆனந்த் என்பவருடைய மூன்று வயது மகன் சுஷாந்த் குருமா கொட்டியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 18ஆம் தேதி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மாடியிலிருந்து தடுமாறி கீழே விழுந்ததால் கீழே போடப்பட்டுள்ள தகர சீட்டில் விழுந்து ஹோட்டலுக்கு தயார் செய்து வைத்திருந்த சூடான சால்னா குருமா அண்டா மீது விழுந்துள்ளது.
குழந்தைக்கு கீழே விழும்போது அண்டா சாய்ந்து குருமா குழந்தையின் மேலே கொட்டி விட்டது. இதில் 90% படுகாயம் அடைந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தைக்கு பிரேத பரிசோதனை நாளை நடைபெற உள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…