சென்னை புழல் அருகே காவாங்கரையில் நடைபெற்ற பாதாள சாக்கடை பணியின் போது, ஊழியர்களின் மரண அலட்சியத்தால் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தையுடன் சாலையில் சென்று கொண்டிருந்த அந்த பிஞ்சு குழந்தை மீது, ஜேசிபி எந்திரத்தில் ஆபத்தான முறையில் கொண்டு வரப்பட்ட கனமான இரும்பு ராடு திடீரென சரிந்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த சிறுவனை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும், சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை உயிரிழந்தது. இந்த நெஞ்சை உலுக்கும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி, பார்ப்போரை பதைபதைக்க வைப்பதோடு பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
https://www.instagram.com/reel/Darkmd5pEtT
இந்த துயர சம்பவத்திற்கு காரணமான பாதாள சாக்கடை பணியினை மேற்கொண்ட ஒப்பந்த மேலாளர் முத்துக்குமார், மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் ஜேசிபி ஓட்டுநர் ரமேஷ் ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதற்கிடையில், விபத்து நடந்தவுடன் படுகாயமடைந்த சிறுவனை முதலுதவிக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கிருந்த மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியதாக குழந்தையின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பொது இடங்களில் முறையான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாமல் அலட்சியமாக செயல்படும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…