உஷார்!.. “பிரிட்ஜ் கம்ப்ரஸர் வெடிக்க இதுதான் காரணமா?”.. கோடை காலத்தில் நீங்கள் செய்ய வேண்டிய 3 தற்காப்பு நடவடிக்கைகள்…!!!

By Muthu Mani on சித்திரை 16, 2026

Spread the love

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வீடுகளில் பிரிட்ஜ் பயன்பாடு பன்மடங்கு உயர்ந்துள்ளது. இந்தச் சூழலில், பிரிட்ஜை சுவரோடு ஒட்டி வைக்காமல், அதன் பின்பக்கம் குறைந்தது ஐந்து முதல் ஆறு இன்ச் வரை இடைவெளி இருக்குமாறு அமைப்பது மிகவும் அவசியம். இவ்வாறு இடைவெளி விடுவதன் மூலம் கம்ப்ரஸரில் இருந்து வெளியேறும் வெப்பம் எளிதாகக் கடத்தப்பட்டு, ஓவர் ஹீட் காரணமாக ஏற்படும் விபத்துகள் மற்றும் கம்ப்ரஸர் பழுதைத் தவிர்க்க முடியும்.

மின்சார ஏற்ற இறக்கங்கள் கம்ப்ரஸரை நேரடியாகப் பாதிக்கக்கூடும் என்பதால், ஒரு நல்ல ஸ்டெபிலைசரைப் பயன்படுத்துவது பிரிட்ஜின் ஆயுளைப் பாதுகாக்கும். அதேபோல், எலிகள் ஒயர்களைக் கடித்துச் சேதப்படுத்தியுள்ளனவா அல்லது பிளக் பாயிண்டுகளில் ஏதேனும் எரிந்த வாசனை வருகிறதா என்பதைத் அவ்வப்போது சோதிக்க வேண்டும். சாதாரண பிளக்குகளைத் தவிர்த்து, தரமான பவர் பிளக்குகளை மட்டுமே பயன்படுத்துவது மின் கசிவு மற்றும் தீ விபத்துகளைத் தடுக்க உதவும்.

   

வெயில் காலத்தில் பிரிட்ஜின் வெப்பநிலையை மிகக் குறைவாக (Too Low) வைக்க வேண்டாம்; இது பழைய பிரிட்ஜ்களில் கம்ப்ரஸருக்கு அதிக அழுத்தத்தைக் கொடுத்து வெடிப்புக்குக் காரணமாகலாம். மேலும், பிரிட்ஜ் மீது நேரடியாகச் சூரிய ஒளி படும் இடங்களில் அதனை வைக்கக் கூடாது. பாதுகாப்பு கருதி, வருடத்திற்கு இரண்டு முறையாவது ஒரு தகுதியான நிபுணரை அழைத்து முழுமையாகச் சர்வீஸ் செய்வது உங்கள் சாதனத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.