நெடுஞ்சாலையில் ஸ்கூட்டரில் சென்ற இருவர் கவனக்குறைவாக ‘யு-டர்ன்’ எடுக்க முயன்றபோது, மின்னல் வேகத்தில் வந்த கார் மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்கூட்டரில் வந்தவர்கள் காரின் வேகத்தைக் கணிக்கத் தவறியதால் ஏற்பட்ட இந்த பயங்கர மோதலில், காரின் ஏர்பேக்குகள் உடனே விரிந்தன. இந்த விபத்தில் ஸ்கூட்டர் தூக்கி வீசப்பட்டதோடு, சாலையோரம் நின்றிருந்த மற்றொருவர் மீதும் ஸ்கூட்டர் மோதி அவரும் பலத்த காயமடைந்தார்.
View this post on Instagram
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, சாலை விதிகளை மதிக்காமல் அவசரமாகத் திரும்புவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை உணர்த்தும் பாடமாக அமைந்துள்ளது. ஒரு சிறிய கவனச்சிதறல் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்லாமல், சம்பந்தமே இல்லாத மூன்றாம் நபர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டும்போது வேகம் மற்றும் போக்குவரத்து ஓட்டத்தைச் சரியாகக் கணித்துச் செயல்பட வேண்டியது அவசியம்.
