BREAKING: திமுக கூட்டணியில் புதிதாக 3 கட்சிகள்…. ஒரே நாளில் கொத்தாக தூக்கிய ஸ்டாலின்….!

Spread the love

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் திமுக கூட்டணி தனது பலத்தை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த எஸ்.டி.பி.ஐ (SDPI) கட்சி, இன்று அதிகாரப்பூர்வமாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. சிறுபான்மையின மக்களின் வாக்குகளை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் இக்கட்சியின் வருகை, திமுக கூட்டணிக்கு கூடுதல் வலுசேர்த்துள்ளதாகக் கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தமிமுன் அன்சாரி தலைமையிலான மனிதநேய ஜனநாயக கட்சியும், தனியரசு தலைமையிலான கொங்கு இளைஞர் பேரவையும் தங்களது ஆதரவை திமுகவிற்குத் தெரிவித்து கூட்டணியில் இணைந்துள்ளன.

கூட்டணியில் இணைந்துள்ள இந்த மூன்று கட்சிகளுடனும் தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் இன்று நடைபெறும் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் தனியரசுவின் ஆதரவும், சிறுபான்மையினர் மத்தியில் மற்ற இரு கட்சிகளின் செல்வாக்கும் திமுகவிற்குச் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய வரவுகள் மூலம் தனது கூட்டணியைப் பலமான நிலையில் தக்கவைத்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தொகுதிப் பங்கீட்டுப் பணிகளை விரைந்து முடித்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்.

Nanthini

Recent Posts

“ஐயோ காப்பாத்துங்க” லிப்டில் நுழைய முயன்ற மருத்துவர்… தலை துண்டானதால் அலறிய செவிலியர்… லிஃப்ட்டுக்குள் 15 நிமிடம் பகீர்… வைரலாகும் திக் திக் வீடியோ..!

2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…

4 minutes ago

மனசாட்சியே இல்லையா..? ரயில் நிலையத்திற்கு பெண் தூக்கி வந்த சூட்கேஸ்.. சோதனையில் தெரிந்த ரத்தக் கறை… உள்ளே இருந்ததைப் பார்த்து அலறிய போலீசார்..!

தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…

12 minutes ago

“உண்மை சொன்ன எனக்கு ஆதரவு இல்லையா..?” மருந்து நிறுவனங்களின் மிரட்டல்.. ORS மோசடியை அம்பலப்படுத்திய மருத்துவர் சிவராஞ்சனி ராஜினாமா..!!

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…

18 minutes ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! அதிமுக, பாஜக ஆதரவாளர் திடீர் பல்டி..? சீமானுக்கு ஆதரவாக நடிகர் ஆர்.கே.சுரேஷ் உருக்கமான வேண்டுகோள்..!!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

39 minutes ago

விஜய் ரூ.5 கோடியை கடனாக கொடுக்கவில்லை… கடைசி நேரத்தில் உண்மையை உடைத்த தந்தை SAC..!!

தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தந்தை…

43 minutes ago

என்ன கில்..! இப்படி இருக்க…? பகை மறந்து பாசம் காட்டிய கேப்டன்கள்.. ஷுப்மன் கில்லின் தாடியை மேடையில் வைத்தே கலாய்த்த ஹர்திக் பாண்டியா வைரல் வீடியோ..!

நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் மும்பை இந்தியன்ஸ் ( கில் இடையிலானMI) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல்…

46 minutes ago