புதுச்சேரியில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தை உயிரிழத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருண் மற்றும் நர்மதா தம்பதியின் மூன்று மாத ஆண் குழந்தைக்கு நேற்று முன்தினம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட குழந்தைக்கு நேற்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனால் பதறிப்போன பெற்றோர் உடனே குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் இல்லாததால் நர்ஸ் திருப்பி அனுப்பியுள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்த குழந்தை இன்று பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
