டீ குடிக்க சென்ற நண்பர்கள்….! அரசு பேருந்து மோதி துடிதுடித்து பலியான சோகம்…. கதறும் குடும்பத்தினர்….!!

By Devi Ramu on புரட்டாதி 9, 2025

Spread the love

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து கடந்த 6-ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு அரசு பேருந்து தென்காசி நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ராஜா என்பவர் ஓட்டி சென்றார். இந்த நிலையில் நெல்லை சந்திப்பு ஈரோடுக்கு மேம்பாலத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது டவுனில் இருந்து சந்திப்பு நோக்கி சென்ற பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் டவுன் வையாபுரி தெருவை சேர்ந்த லோகேஷ், சாதிக், சந்தோஷ் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். கோயம்புத்தூரில் வேலை பார்த்த 3 பேரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ஊருக்கு வந்துள்ளனர். பின்னர் நள்ளிரவு நேரம் கடைக்கு டீ குடிக்க சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.