கடந்த மூன்று வாரங்களாக டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தமிழக சுகாதாரத்துறை சார்பாக தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடந்த மூன்று வாரமாக டெங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இதுவரை 15000 மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் அந்தந்த மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனர்கள் கொசு உற்பத்தியாகும் இடங்களில் நகராட்சி நிர்வாகத்துறையுடன் இணைந்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நீர்நிலைகள், குட்டைகள், ஓடைகள் உள்ளிட்ட இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் வீட்டில் அருகே நீர் தேங்காதவாறு பொதுமக்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் புத்தூர் தாலுகா ஆர்யபு மேர்லாவைச் சேர்ந்தவர் கார்த்திக் சுவர்ண மேர்லா (27). இவர் அப்பகுதி இந்து ஜாக்ரன்…
ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பி.எட் பட்டதாரி பெண்ணும், கிருஷ்ணமூர்த்தி என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாகக்…
ஹைதராபாத் உப்பல் பகுதியில் வசித்து வரும் சாரதா என்ற பெண்ணுக்கு, மேடிப்பள்ளியைச் சேர்ந்த மாலோத் ரவி என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.…
குஜராத் மாநிலம் மோர்பி நகராட்சியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடுமையான இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வந்துள்ளார். அவருக்கு…
தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் ஆத்மகூர் மண்டலம் அமரசிந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர் ரெட்டி. இவர் குற்ற வழக்கு ஒன்றில்…
கர்நாடக மாநிலம் உத்திர கன்னடா மாவட்டம் எல்லார்ப்பூர் தாலுகா மஞ்சிகேரி பகுதியைச் சேர்ந்தவர் அஜய் பண்டார்கர். இவர் பைந்தூர் டவுன்…