போடு ரகிட ரகிட… தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை… மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு…!

By Nanthini on ஆவணி 31, 2025

Spread the love

தமிழகத்தில் சமீபத்தில் தான் விநாயகர் சதுர்த்தி விழா காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது பள்ளிகளுக்கு இந்த வாரத்தில் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.

செப்டம்பர் ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமை மிலாடி நபியை முன்னிட்டு அரசு விடுமுறையாகும். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 6 சனிக்கிழமை, செப்டம்பர் 7 ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையாகும். வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் காலாண்டு தேர்வு தொடங்குவதால் இந்த தொடர் விடுமுறை மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.