சென்னையில் தவெக நிர்வாகி கண்ணன் மற்றும் துணை நடிகர் பிரதீப் ஆகியோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியையும் சட்டம்-ஒழுங்கு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. குற்றச் செயல்களை உடனடியாகக் கட்டுப்படுத்தும் நோக்கில், சென்னை காவல்துறை ‘ரவுடிகள் டிரைவ்’ என்ற சிறப்புத் தீவிர அதிரடி வேட்டையைக் கையில் எடுத்துள்ளது.
ஒரே நாளில் குற்றப் பின்னணி கொண்ட 285 பேரை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ள காவல் துறையினர், தலைமறைவாக உள்ள பிற ரவுடிகளையும் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர். சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், பொதுமக்களின் பயத்தைப் போக்கி அமைதியை நிலைநாட்டவும் காவல்துறையினர் மேற்கொண்டு வரும் இந்த அதிரடி நடவடிக்கை நகர் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
