வேலைக்கு நடுவே விபரீத விளையாட்டு விளையாடிய 26 வயது இளம்பெண்… 2 வயது குழந்தையை தவிக்க விட்டு… மாமியார் வீட்டில் கண்ட அதிர்ச்சி…!

By Nanthini on மார்கழி 6, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் விளையாட்டால் இளைஞர்கள் பலரும் தங்கள் வாழ்க்கையை இழக்கும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டது. ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பண இழப்பு மற்றும் அதனால் உருவாகும் மன அழுத்தம் தொடர்பாக சமூகத்தில் மீண்டும் கவலையை ஏற்படுத்தும் ஒரு சம்பவம் தென்காசியில் நடந்துள்ளது. தென்காசி மாவட்டம் சிவகிரி அம்பேத்கர் தெற்கு தெருவை சேர்ந்த மேன் ஓட்டுநர் பிரகாஷ் என்பவருடைய மனைவி பொன் ஆனந்தி (26). இவர் ஆன்லைன் விளையாட்டில் அடிமையாகி தொடர்ந்து விளையாடி வந்ததால் பணத்தை இழந்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் மன வேதனைக்கு உள்ளான ஆனந்தி தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு 2 1/2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. கணவர் கோவையில் வேலை பார்த்து வர ஆனந்தி கடையநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். குழந்தை பாவு சத்திரத்தில் அவருடைய பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தது. சம்பவத்தன்று காலை மாமியார் செல்வி வீட்டுக்கு சென்ற போது கதவு திறக்கப்படாததால் வேறு ஒரு சாவியை பயன்படுத்தி உள்ளே சென்றார். அப்போது உள்ளே ஆனந்தி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

   

உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆனந்தி அறையில் இருந்து ஒரு கடிதத்தை மீட்டனர். அந்தக் கடிதத்தில், என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்ததால் இந்த முடிவை எடுத்தேன் என்று எழுதப்பட்டிருந்தது. 63 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர். திருமணம் ஆகி 3 1/2 வருடங்களை ஆகும் நிலையில் ஏற்பட்ட இந்த துயர சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.