மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டி பசும்பொன் நகரைச் சேர்ந்த 60 வயதுடைய அமுதவள்ளி என்ற மாற்றுத்திறனாளி மூதாட்டி, திருமணமாகாமல் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக மாலை முதல் இரவு வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த மின்தடையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மர்மநபர் ஒருவர், மூதாட்டியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரைக் கடுமையாகத் தாக்கி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
மூதாட்டியின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடி வரவே, அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சமயநல்லூர் மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், அதே கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (26) என்பவரைக் கைது செய்தனர். விசாரணையில், அவர் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்ததாகவும், அந்த போதை மயக்கத்திலேயே தனியாக இருந்த மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்து இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
பாதுகாப்பற்ற முறையில் தனியாக வசித்த மாற்றுத்திறனாளி மூதாட்டி மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கிராமப் பகுதிகளில் தங்குதடையின்றி புழங்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டத்தை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் காவல்துறையினருக்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…
மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள்…
ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் உள்ள ரீங்கஸ் - காடூ ஷ்யாம் பிரதான சாலையில் பெரும் விபத்து ஒன்று நொடிக்…
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடுபிடித்துள்ள சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதியில்…
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ ஆதரவு பெற்ற ஷெஹ்சாத் பாட்டி தலைமையிலான தீவிரவாத வலைப்பின்னல், இந்திய இளைஞர்களை இலக்கு வைத்து…