மகளிருக்கு மாதம் ரூ.2,500… வந்தாச்சு சூப்பர் குட் நியூஸ்… முதல்வர் விஜய் வெளியிடப்போகும் அந்த ஒரு அறிவிப்பு…!

By Nanthini on வைகாசி 11, 2026

Spread the love

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தவுடன் அரசுத் துறைகளின் நிதிநிலை குறித்த விரிவான தணிக்கை அறிக்கையைப் பரிசீலித்து, அதன் அடிப்படையில் ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ மூலம் பெண்களுக்கு மாதந்தோறும் ₹2,500 வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அக்கட்சியின் தலைவர் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். இத்திட்டத்தை எவ்வித தாமதமுமின்றி எவ்வளவு விரைவாகச் செயல்படுத்த முடியும் என்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய நிதித்துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தணிக்கை நடவடிக்கைகள் நிறைவடைந்ததும், மாநிலத்தின் நிதி ஆதாரங்களைக் கணக்கில் கொண்டு இத்திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழகப் பெண்கள் மத்தியில் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.