தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்பு செயல்படுத்தப்பட்டு வந்த விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் கொரோனா காரணங்களால் கைவிடப்பட்டிருந்தது. 2021-ல் திமுக ஆட்சி அமைத்த பின்னர், மீண்டும் திட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி அல்லது கைக்கணினி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2025 – 2026 தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, முதற்கட்டமாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பைச் செயல்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசு முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை ஹெச்.பி., டெல், ஏசர் ஆகிய மூன்று நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்துள்ளது.
இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் பணி எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு பதிலளித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இணைந்து டிசம்பர் மாத இறுதியில் அல்லது ஜனவரி மாதத் துவக்கத்தில் இந்த மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்குவார்கள் என்று கூறியுள்ளார்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…