23 வருடமாக 90 LG-போன்களை பொக்கிஷமாக சேகரித்த நபர்.. காரணம் என்ன தெரியுமா?

23 வருடமாக நபர் ஒருவர் எல்ஜி போனை சேகரித்து வைத்து அதன் மீது இருந்த காதலை வெளிப்படுத்திய சம்பவம் வெளியாகியுள்ளது.

தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நிறுவனம் தான் எல்ஜி. இந்த நிறுவனம் சமீபத்தில் ஸ்மார்ட்போன் வணிகத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதாக கூறியிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து, தென்கொரியாவை சேர்ந்த அவர் பெயர் Ryu Hyun-soo 53 வயதான நபர் ஒருவர், 23 வருடங்களில் 90 போன்களை வாங்கி சேகரித்துள்ளார்.

அதனை பொக்கிஷமாக வைத்து பாதுகாக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், எனக்கு எல்.ஜி போனில் பிடித்ததே அதன் ஆடியோதான்.

டிசைன், லுக் மற்றும் ஆப்பிரேட் செய்ய உதவும் சிறப்பம்சங்களும் தான் எல்.ஜி போனில் எனக்கு பிடித்தவை என தெரிவித்துள்ளார்.

மேலும், LG போன் மீது தனக்குள்ள காதலை வெளிப்படுத்தும் வகையில் ஒரு அறையையே பிரத்யேகமாக போன் வைப்பதற்கு என மாற்றியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *