உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மகாராஜ்பூர் காவல் எல்லைக்குட்பட்ட விபௌசி-நஜஃப்கர் கிராமத்தில், திருமணம் ஆகி சில மாதங்களே ஆன 22 வயது இளம்பெண் ஒருவர் தனது மாமனார் வீட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்துத் தகவலறிந்து ஓடோடி வந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், வரதட்சணை கொடுமை காரணமாக மாமனார் வீட்டார் திட்டமிட்டுத் தங்கள் மகளையைக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளதாகக் கூறி வீட்டின் முன் விடிய விடியப் போராட்டம் நடத்திப் ரகளையில் ஈடுபட்டனர். இதையறிந்த கான்பூர் போலிஸார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண்ணின் கணவரை காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தைப் நேரில் பார்வையிட்டுப் பல முக்கிய ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர். உடலைக் கைப்பற்றிய போலிஸார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலிஸார் கொலை வழக்கு மற்றும் தற்கொலை ஆகிய இரு கோணங்களிலும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புதுப்பெண்ணின் இந்த மர்ம சாவு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் பள்ளப்பட்டி சின்னேரி வயக்காடு பகுதியைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி பாலசுப்பிரமணி என்பவரது பட்டறையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு…
தேசிய அளவிலான அவசரநிலைகள் அல்லது பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில், பிரித்தானிய குடிமக்கள் தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீரை குறைந்தபட்சம்…
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலைக்கிராமப் பகுதியான சக்ராத்தாவைச் சேர்ந்த ஷர்மிளா என்ற மணப்பெண்ணுக்கும், அனில் என்பவருக்கும் அண்மையில் திருமணம்…
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லால்டி தேவி என்ற பெண் மீன் சாப்பிட்டபோது எதிர்பாராதவிதமாக தொண்டையில் முள் சிக்கியது. தீவிர சிகிச்சை…
பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள் பழக்கத்தின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், கபூர்தலாவைச் சேர்ந்த 10 வயது சிறுவன்…
இந்தியக் குடிமக்கள் மற்றும் இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினர் வைத்திருக்கும் ஓட்டுநர் உரிமங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், இரு தரப்பினருக்கும்…