அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

By Gayathri on ஐப்பசி 28, 2026

Spread the love

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்திரா காலனி குடிசைப் பகுதியைச் சேர்ந்த 22 வயதான சோனு என்பவர் மீது அவ்வழியாக வந்த அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து பயங்கரமாக மோதியது. இச்சம்பவம் தொடர்பாகக் காலை 7:23 மணியளவில் அவசரக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இளைஞரின் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்ற பேருந்தையும் அதன் ஓட்டுநரையும் அடையாளம் காணும் பொருட்டு, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.