அய்யோ நெஞ்சே பதறுது… 21 வயது கர்ப்பிணி பெண்ணை அடித்துக் கொன்று வயலில் எரித்த கணவர் குடும்பத்தினர்… வரதட்சணையால் அரங்கேறிய கொடூரம்…!

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலத்தில் வரதட்சணை கேட்டு 21 வயது கர்ப்பிணி பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் கோபால்பூர் கிராமத்தில் ரஜினி குமாரி என்ற 21 வயது பெண் கணவர் சச்சின் உடன் வசித்து வந்துள்ளார். இந்த வருடம் ஏப்ரல் மாதம் தான் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் கர்ப்பமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை கணவரும் அவருடைய உறவினர்களும் ஐந்து லட்சம் ரூபாய் கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தியுள்ளனர்.

அது நிறைவேறாததால் அவர்கள் நேற்று முன்தினம் அந்தப் பெண்ணை கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்து உள்ளார். பிறகு ஆதாரங்களை அளிக்கும் நோக்கத்தில் அவரது உடலை தங்கள் வயலில் வைத்து குடும்பத்தோடு சேர்ந்து எரித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த அந்தப் பெண்ணின் தாயார் உடனே போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

குஷியோ குஷி…. நகைக்கடன் தள்ளுபடி லிஸ்ட் ரெடி… தமிழக அரசின் ரகசிய மூவ்…. மக்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்….!

தமிழகத்தில் கூட்டுறவு மற்றும் அரசு வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள நகைக்கடன்கள் குறித்த விவரங்களை தமிழக அரசு தீவிரமாகச் சேகரித்து வருவதாகத்…

6 minutes ago

போலீஸ் காரையே அடித்து நொறுக்கிய ‘ஜிக்-ஜாக்’ பைக் கும்பல்… நள்ளிரவில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

நாக்பூரில் நள்ளிரவு நேரத்தில் அத்துமீறி பைக்குகளை தாறுமாறாக ஓட்டிச் சென்ற ஒரு கும்பல், தன் காரில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த…

8 minutes ago

ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி… நள்ளிரவில் அலறிய சத்தம்… இருட்டில் கைவரிசை காட்டிய காமுகன்… இறுதியில் நடந்த பயங்கர சம்பவம்…!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கிப் படித்து…

12 minutes ago

“அந்த ராத்திரி நடந்தது என்ன?”…. எடப்பாடி போட்ட கண்டிஷன்… அலறிய விஜய்.. அதிமுக-வை சின்னாபின்னமாக்கும் தவெக?…. அப்பாவு உடைத்த ரகசியம்..!

தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத வகையில் புதிய திருப்பங்களையும், பரபரப்பான விவாதங்களையும் சந்தித்து வருகிறது. சமீபத்திய தேர்தல்…

21 minutes ago

ஒரே ஒரு ஊசி… வயிற்றில் 8 மாத குழந்தையுடன் துடிதுடித்த கர்ப்பிணி பெண்… மருத்துவமனையை அலறவிட்ட கணவனின் பகீர் குற்றச்சாட்டு…!

நவி மும்பை ஐரோலியில் உள்ள ரஜமாதா ஜிஜாவ் மாநகராட்சி மருத்துவமனையில், தவறான ஊசி செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் புகாரில் 8 மாத…

25 minutes ago

“சி.வி.சண்முகத்தின் உயிருக்கு ஆபத்து?”…. உடனடியாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு… சென்னை ஹைகோர்ட் போட்ட கெடுபிடி உத்தரவு….!

முன்னாள் அமைச்சரும், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகத்திற்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம்…

33 minutes ago