கெஞ்சிய கர்ப்பிணி பெண்…. நள்ளிரவில் கொடூரமாக கொன்ற 21 வயது காதலன்… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

By Devi Ramu on ஆவணி 17, 2026

Spread the love

ஐதராபாத் நகரம் பாலாப்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பணியாற்றி வந்த இளம் பெண் ஒருவரை, அவரது காதலனான பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அகமது (21) என்பவர் கொடூரமாகப் படுகொலை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பமாக இருந்த நிலையில், தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு அகமதுவிடம் வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த அகமது அவரைக் கொடூரமாகக் கொலை செய்து, சடலத்தைச் சாக்குமூட்டையில் கட்டி ரகசியமாகக் கடத்த முயன்றுள்ளார். சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் , சடலத்தைக் கடத்த முயன்ற அகமதுவை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.