பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள நீலம் பள்ளத்தாக்கில் அவசரமாகத் தரையிறங்க முயன்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 21 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதற்கு முன்னதாக, காஷ்மீர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது பாகிஸ்தான் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த வன்முறைத் தாக்குதலில் 19 குழந்தைகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
