2026 புத்தாண்டின் ஆரம்பத்தில் ஏற்படும் சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். சூரிய பெயர்ச்சியினை அடிப்படையாகக் கொண்டே தமிழ் மாதங்கள் பிறக்கின்றது. இன்னும் சில நாட்களில் புத்தாண்டு பிறக்கும் நிலையில் ஜனவரி 14-ஆம் தேதி சூரியன் மகர ராசிக்கு செல்ல உள்ளார். அவ்வாறு மகர ராசிக்கு செல்லும்போது சூரியனால் அதிர்ஷ்டத்தை சந்திக்கும் குறிப்பிட்ட நான்கு ராசிக்காரர்கள் பற்றி இதில் பார்க்கலாம்.
மேஷம்:
2026 முதல் சூரிய பெயர்ச்சியால் மேஷ ராசியினரின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். தொழில் விஷயங்களில் அதிக பலன்கள் கிடைப்பதுடன் இந்த காலத்தில் அரசு பணி மற்றும் உயர் பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது. தொழில் செய்து வருபவர்கள் நல்ல லாபத்தை பெறுவதுடன் நிதி நிலைமையும் மேம்படும். பழைய கடன்களை அடைப்பதற்கும் வாழ்க்கையில் நிம்மதி ஏற்படவும் செய்யும்.
சிம்மம்:
2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் நடக்கும் சூரிய பெயர்ச்சியால் சிம்ம ராசியினருக்கு அனைத்து முயற்சிகளும் வெற்றியை கொடுக்கும். புதிய பதவிகளை பெறுவதுடன் பணவரவு அதிகரிக்கும். பழைய முதலீடுகளில் நல்ல லாபமும் நிதி நிலையில் முன்னேற்றமும் ஏற்படும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் விலகி அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.
விருச்சிகம்:
ஜனவரி 14-ஆம் தேதி நடக்கும் சூரிய பெயர்ச்சியால் விருச்சிக ராசியினரின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படுவது உடன் பணியாற்றும் இடத்தில் மரியாதை உண்டாகும். கடின உழைப்புக்கு நல்ல பலனும் பதவியில் உயர்வும் கிடைப்பதுடன் கடன் பிரச்சினைகள் தீரும். வணிக ஒப்பந்தத்தில் லாபத்தை பெறலாம். புதிய தொழில் தொடங்குவதற்கு இந்த காலகட்டம் நல்ல பலனை அளிக்கும். நிலுவையில் இருக்கக்கூடிய பணங்கள் உங்களைத் தேடி வந்து சேரும்.
தனுசு:
இந்த ராசிக்காரர்களுக்கு சூரிய பெயர்ச்சி பொற்காலமாக அமைவதுடன் வாழ்க்கையில் பல அற்புதமான மாற்றங்கள் ஏற்படும். வேலை தேடுபவர்கள் நல்ல வேலையை பெறுவதுடன் புத்தாண்டில் இன்னும் பல நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தினரிடமிருந்து முழு ஆதரவும் குழந்தைகள் மூலம் நல்ல செய்தியையும் பெறுவீர்கள். சமூகத்தில் உங்களுக்கான மரியாதையும் அதிகரிக்கும்.
