குஷியோ குஷி… ஜனவரியில் பள்ளிகளுக்கு விடுமுறை… தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்…!

By Nanthini on மார்கழி 27, 2025

Spread the love

தமிழகத்தின் விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்களுக்கு குஷிதான். சமீபத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஜனவரி 4 வரை மொத்தம் 12 நாட்கள் அரையாண்டு விடுமுறையாகும். அதன் பிறகு ஜனவரி 5 தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை நாள்காட்டியின் படி ஜனவரி மாதத்தில் மேலும் நான்கு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறையாகும்.

அதாவது ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் பொங்கல் பண்டிகை விடுமுறையாகும். பிறகு ஜனவரி 26 குடியரசு தினம் என்பதால் அன்றைய தினமும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் செயல்படாது. மேலும் 2026 ஆம் ஆண்டு மொத்தமாக பள்ளிகளுக்கு 26 நாட்கள் அரசு விடுமுறையாகும். தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் பள்ளி மாணவர்கள் குஷியில் உள்ளனர்.