“2026-ல் யாருடைய ஆட்சி”?… சத்தமில்லாமல் ஸ்கோர் செய்யும் விஜய்…. ஸ்டாலின் மேஜைக்கு சென்ற உளவுத்துறையின் ரகசிய ரிப்போர்ட்….!

By Nanthini on தை 13, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மாநில உளவுத்துறை தயாரித்துள்ள ரகசிய அறிக்கை ஒன்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிக்கையில் முதலமைச்சர் ஸ்டாலினின் தனிப்பட்ட செல்வாக்கு மாநிலம் முழுவதும் வலுவாக இருப்பதாகவும், அனைத்துத் தரப்பு மக்களும் அவரை ஒரு பொறுப்புணர்வுள்ள நிர்வாகியாகப் பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது மக்கள் ஓரளவு நன்மதிப்பு வைத்திருந்தாலும், அதிமுக-பாஜக கூட்டணியானது ஆட்சி அமைக்கும் அளவிற்குப் போதுமான வரவேற்பைப் பெறவில்லை என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

குறிப்பாக அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தால் அது மீண்டும் பாஜகவின் கட்டுப்பாட்டிலேயே இயங்கும் என்ற அச்சம் வாக்காளர்கள் மத்தியில் நிலவுவதாகவும், இது அக்கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்றும் உளவுத்துறை கணித்துள்ளது. பாரம்பரிய அதிமுக தொண்டர்களே கட்சியின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டால் குழப்பத்தில் இருப்பதாகத் தெரிகிறது. இந்த அதிருப்தி ஒருபுறமிருக்க, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் சுமார் 20 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளதாக அந்த ரகசிய ரிப்போர்ட்டில் அதிர்ச்சிகரமான தகவல் இடம்பெற்றுள்ளது.

   

இந்தச் சூழலில், வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் திமுகவின் கை ஓங்கியிருப்பதாகக் கூறும் அந்த அறிக்கை, ஆளும் தரப்பிற்கு ஒரு முக்கிய எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. பாஜக ஆதரவு சக்திகள் திமுக கூட்டணியைப் பிரிக்கவும் பலவீனப்படுத்தவும் தீவிர முயற்சி எடுப்பார்கள் என்பதால், கூட்டணி மேலாண்மையில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த ரகசிய அறிக்கையின் தரவுகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.