இண்டிகா ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் விமான டிக்கெட் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. அதன்படி சென்னை – பெங்களூ ரூ.3,129 என இருந்த டிக்கெட் விலை தற்போது ரூ.20,599 ஆகவும் உயர்ந்துள்ளது. அதனைப் போலவே சென்னையிலிருந்து திருச்சிக்கு விமான டிக்கெட் 3,129 ரூபாயிலிருந்து 14,961 ரூபாயாகவும், சென்னையிலிருந்து திருவனந்தபுரம் டிக்கெட் விலை 6,805 ரூபாயிலிருந்து 34,403 ரூபாயாகவும், சென்னையிலிருந்து மும்பைக்கு ரூ.5,980 – ரூ.42,448 ஆகவும், சென்னையிலிருந்து டெல்லிக்கு ரூ.7,746 ஆக இருந்த டிக்கெட் விலை தற்போது 32,782 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதனால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .
