அதிமுக கோட்டையில் திமுகவிற்கு அதிர்ச்சி.. EPS முன்னிலையில் 2000 பேர் திடீர் இணைப்பு…!!

By Soundarya on தை 30, 2026

Spread the love

அதிமுகவின் எஃகு கோட்டையாகக் கருதப்படும் சேலம் மாவட்டத்தைத் தன்வசப்படுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஓமலூரில் ஒரு பிரம்மாண்டமான அரசியல் நிகழ்வு அரங்கேறியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) முன்னிலையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்தனர்.

கடந்த சில வாரங்களாகவே சேலத்தில் மாற்றுக் கட்சியினரைத் திமுக தன் பக்கம் இழுத்து வந்த நிலையில், தற்போது ஒரே மேடையில் ஆயிரக்கணக்கானோர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தது திமுகவிற்கு ஒரு மிகப்பெரிய அரசியல் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. “அதிமுக ஒருபோதும் அசைக்க முடியாத பலத்துடன் உள்ளது” என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்ததாகக் குறிப்பிட்ட EPS, 2026 தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என உறுதிபடத் தெரிவித்தார்.