தமிழகம் முழுவதும் மின்சாரக் கட்டணம்.. இரவோடு இரவாக வந்த மகிழ்ச்சியான செய்தி..!!

By Soundarya on வைகாசி 20, 2026

Spread the love

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் CTR நிர்மல்குமார் மின்சாரக் கட்டணம் தொடர்பாக மக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தற்போது மின்சார வாரியம் சுமார் ₹2.5 லட்சம் கோடி கடனில் மூழ்கியுள்ளதாகவும், போதிய ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதியான 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை வரும் மாதத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்குக் கொண்டு வரும் என்ற மகிழ்ச்சியான செய்தியை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மக்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வந்த மாதம் ஒருமுறை மின்சாரம் கணக்கெடுக்கும் முறை (Monthly Billing) விரைவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஊழியர்கள் பற்றாக்குறையைச் சரிசெய்ய புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், அதன் பின்னரே இந்த மாதந்திரக் கணக்கீட்டுப் பணி முழுமையாக அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் விளக்கியுள்ளார். இந்த புதிய கணக்கெடுப்பு முறை அமலுக்கு வரும்போது, இரு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்படுவதால் மக்கள் கூடுதல் கட்டண அடுக்குக்குள் (Slab rate) சென்று அதிகப் பணம் செலுத்தும் சுமை பெருமளவில் குறையும்.