தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரிக்கும் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு 7000 ரூபாய் போனஸ் ஆக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதுச்சேரி அரசில் பணியாற்றும் குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு இந்த தொகை கிடைக்கும். புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 570 மதிப்புள்ள தீபாவளி தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
