கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கப்பட்ட உபரித்தொகையை கணக்கிட்டு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க 44.11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், லாபம் ஈட்டாத கூட்டுறவு சங்கங்கள் இருப்பின், அதன் பணியாளர்களுக்கு 3,000 ரூபாய் தொடக்க சங்க பணியாளர்களுக்கு 2400 ரூபாய் போனஸ் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
