BIG NEWS: திமுகவில் 2 MLA-க்கள் ராஜினாமா..? அரசியல் அதிரடி திருப்பம்.. பின்னணி என்ன…?

By Swetha on ஆனி 2, 2026

Spread the love

திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சீர்காழி மற்றும் கடையநல்லூர் தொகுதி மதிமுக எம்.எல்.ஏ-க்கள் இருவரும், தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மைகாலமாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவிக) அரசைப் புகழ்ந்து பேசி வரும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவின் விருப்பத்தின் பேரிலேயே இந்த அதிரடி நகர்வு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் நீடிப்பதை விட, தங்களின் அரசியல் தனித்துவத்தை நிரூபிக்க இதுவே சரியான தருணம் என்று கட்சியின் முக்கியப் புள்ளிகள் கருதுவதே இதற்குக் காரணம் எனத் தெரிகிறது.

மதிமுகவின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, திமுக கூட்டணியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளும் தொண்டர்களும் வைகோவிற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்ற பதவிகளை ராஜினாமா செய்வதன் மூலம், தங்களின் தார்மீக பலத்தை நிரூபிக்க முடியும் என்றும் அவர்கள் வாதாடுகின்றனர். இந்த பரபரப்பான அரசியல் நகர்வுகள் தமிழகக் கூட்டணி அரசியலில் அடுத்தடுத்து பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.