இந்தியாவில் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கும் மக்களுக்காக மருத்துவ காப்பீட்டை தரக்கூடிய திட்டம் தான் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம். வருடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கான மருத்துவ காப்பீட்டை இந்த திட்டம் வழங்குகின்றது. இந்த திட்டத்தின் பலனை பெற வேண்டும் என்றால் வருடத்திற்கு 436 ரூபாய் ப்ரீமியம் செலுத்த வேண்டும். அதாவது மாதம் மாதம் 40 ரூபாய்க்கும் குறைவாக செலுத்த வேண்டும்.
2 லட்சம் ரூபாய் காப்பீடு கிடைக்கும் பாலிசிதாரர் உயிரிழந்து விட்டால் நாமினி அல்லது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அரசின் இந்த காப்பீட்டு திட்டம் ஆனது ஜூன் 1ம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஒவ்வொரு வருடமும் மே 31ஆம் தேதிக்குள் வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸ் கணக்கில் இருந்து வருடத்திற்கு 436 டெபிட் செய்யப்படும். இந்த திட்டத்தில் ஒருவர் இணைய வேண்டும் என்றால் 18 முதல் 50 வயதிற்கு மிகவும் இருப்பது அவசியம்.
இந்த காப்பீடு திட்டமானது ஒரு வருடத்திற்கு மட்டுமே இன்சுரன்ஸ் கவரேஜ் தரக்கூடியது என்பதால் பாலிசியை வருடம் தோறும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இந்த திட்டத்தை sbi உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் மட்டுமல்லாமல் அஞ்சல் அலுவலகங்களில் தனிப்பட்ட கணக்கு வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும் திட்டத்தில் இணையலாம். ஒருவேளை உங்களுடைய வங்கி கணக்கு மூடப்பட்டால் அல்லது பிரீமியம் வசூலிக்கும் சமயத்தில் போதுமான பணம் வங்கி கணக்கில் இல்லாமல் இருந்தால் இந்த காப்பீடு காலாவதியாகிவிடும்.
ஒருவருக்கு இந்த திட்டத்தின் மூலம் ஒரு பாலிசி மட்டும்தான் எடுக்க முடியும். இந்த திட்டத்திற்கு தகுதியான ஒருவர் உங்களுக்கு அருகில் உள்ள ஒரு வங்கி மூலம் இணைத்து பயன் பெறலாம். இந்த திட்டத்தில் இணைய வங்கி கணக்குடன் ஆதார் நம்பரையும் கட்டாயம் இணைத்து இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் இணைந்த ஒருவர் திடீரென இறந்து விட்டால் அவருடைய நாமினி சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, jansuraksha.govn.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…
வேலூர், காட்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் தபால் வாக்குகள் எண்ணிக்கை 118 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். அதே தொகுதியில்…
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. இந்த நிலையில் மதுரை…
திருச்சி மேற்கு தொகுதி முதல் சுற்றில் அமைச்சர் கே என் நேரு பின்னடைவை சந்தித்துள்ளார் தபால் வாக்கு எண்ணிக்கையில் அவர்…
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…