இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் தான் வாழை. சிறிய பட்ஜெட்டில் இந்த படத்தை அவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக பொன் வே ல் மற்றும் ராகுல் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் மற்ற கதாபாத்திரத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் ஜானகி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
திரை உலகின் பிரபல இயக்குனர்கள் மட்டும் நடிகர்கள் என பலரும் இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்துவிட்டு மாரி செல்வராஜை கட்டித்தழுவி பாராட்டினர். மக்களின் உச்சகட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. திரைக்கதை முதல் படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் வரை ஒட்டுமொத்த படமும் மக்களின் உச்சகட்ட ஆதரவை பெற்று வருகின்றது.
இந்த படம் தான் இயக்குனர் மாறி செல்வராஜின் முதல் படமாக வெளிவந்திருக்க வேண்டுமாம். இந்த திரைப்படத்தின் கதையை தான் முதன் முதலில் அவர் துணை இயக்குனராக இருந்தபோது எழுதியுள்ளார். தனது சிறுவயதில் அனுபவித்த வழிகளை மையமாகக் கொண்டு இந்த திரைப்படத்தை அவர் உருவாக்கியுள்ளார். அந்த வலிகளை திரையின் மூலம் படம் பார்ப்பவர்களுக்கும் கடத்தினார்.
குறிப்பாக படத்தில் கிளைமாக்ஸ் காட்சி அனைவரின் மனதையும் கலங்க வைத்தது. இந்த நிலையில் வாழை திரைப்படம் 9 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி உலகளவில் 9 நாட்களில் ரூ. 18.8 கோடி வரை வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் திமுக தரப்பிற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 9:30 மணி…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் அவர் பின்னடைவைச் சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில்…
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்…
சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா முன்னிலை பெற்று வருகிறார். அவர்…
ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் அரவிந்த் தொடக்கத்திலிருந்தே முன்னிலை…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வாக்கு…