TRENDING
நீங்க CHECK யூஸ் பண்றீங்களா?.. அதில் இருக்கும் 2 கோடுகள் பற்றி தெரியுமா?.. இதோ உங்களுக்கான விவரம்..!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அப்படி வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்களில் ஒரு சிலர் செக் புக் வைத்து இருக்கலாம். அதிலும் வங்கிக் கணக்கில் NRI அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் காசோலை இல்லாமல் பண பரிவர்த்தனை செய்ய முடியாது. இந்த காசோலையில் இரண்டு கோடுகள் போடப்பட்டு இருப்பதை நாம் பார்த்திருப்போம். இதனை CROSS CHECK என்று அழைப்பார்கள். இந்த கிராஸ் செக்கை பயன்படுத்துவதன் மூலமாக வங்கியில் பணத்தை பெற முடியாது. அதாவது கையில் பணத்தை பெறாமல் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதனை நான்கு வகையாக பிரித்துள்ளனர்.
அதாவது செக்கில் சாதாரணமாக இரண்டு கோடுகள் போட்டு தருவது என்பது SIMPLE CROSS CHECK எனப்படும். இந்த காசோலை மூலமாக பணத்தை வங்கி கணக்கில் நாம் வரவு வைக்க முடியும். அடுத்ததாக SPECIAL CROSS CHECK என்பது காசோலையில் இரண்டு கோடுகளுக்கு நடுவில் வங்கியின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். பெயர் குறிப்பிட்ட வங்கியில் மட்டுமே நீங்கள் பணத்தை வரவு வைக்க இயலும்.
அடுத்து RESTRICTED CROSS CHECK என்பது காசோலையில் இடம் பெற்றிருக்கும் இரண்டு கோடுகளுக்கு நடுவே PAYEE என்று எழுதப்பட்டிருந்தால் அதனை யார் வேண்டுமானாலும் வங்கிக்கு சென்று பணத்தை வரவு வைக்க முடியும் என்பது அர்த்தமாகும். ஒருவேளை AC PAYEE என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த வங்கிக் கணக்கை கையாளும் நபர் மட்டுமே பணத்தை வரவு வைக்க முடியும்.
இறுதியாக DOUBLE CROSS CHECK என்பது காசோலையில் இரண்டு கோடுகளில் ஒரு கோட்டுக்கு மேலே வங்கி கணக்காளரின் பெயரும் மற்றும் மற்றொரு கோட்டுக்கு மேலே வங்கியின் பெயரும் இடம் பெற்றிருக்கும். மேலும் RESTRICTED CROSS CHECK இல் இரண்டு கோடுகளுக்கு நடுவே PAYEE என்பது இடம்பெற்று இருந்தால் அந்த பெயருடைய வேறு நபரும் சென்று பணத்தை வரவு வைக்க வாய்ப்புள்ளதால் இந்த DOUBLE CROSS CHECK திட்டம் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.